Friday, July 30, 2010

குழப்பம்



இன்றும் என்றும் எப்பொழுதும் எனக்குள் எழும் ஓர் பெருங்குழப்பம்
வந்தோம் இங்கே வாழ்வதற்கு வாழ்கை மட்டும் புரியவில்லை.

இன்பம் ஒன்றே நோக்கென்றால் வழிகள் பல தான் இங்கில்லையோ?
துன்பம் துயரம் துக்கமென்று தினமும் அழுவது எதற்கிங்கே?

சுற்றம், உறவு, நட்பெல்லாம் வாழ்வின் முக்கிய உருப்பென்றால்
சர்ச்சை சண்டை மோதலேன்று உற்றாருடனே போர் எதற்கு?

காதல் அன்பு இரக்கந்தான் வாழ்வை வாழும் முறையேன்றால்
கண்ணை மூடி திறப்பதற்குள் அவையே எப்படி பகையாகும்?

கடவுள் சொல்லும் கருத்தெல்லாம் சத்தியச் சங்கமம் 'தான்' என்றால்
நித்தம் நித்தம் அவன் பெயரில் கொலையும் கறையும் இங்கெதற்கு?

மனிதன் என்பது விலங்கென்றால் - பெருக்கியல் மட்டுமதன் வரைஎன்றால்
வாழ்வின் விவரம் அதற்கெதற்கு? வாழ்வதன் அர்த்தம் அதற்கெதற்கு?

இன்றும் என்றும் எப்பொழுதும் எனக்குள் எழும் ஓர் பெருங்குழப்பம்
வந்தோம் இங்கே வாழ்வதற்கு வாழ்கை மட்டும் புரியவில்லை.

Share/Bookmark


4 comments:

rpurigella said...

waiting for google translate to support tamil :-)

VoidBuff said...

Here is a crude translation:

have this confusion come up in me always..
we are here so we live but life in itself is so not comprehensible

if pleasure is the only goal, there sure are a million ways
why should pain, grief and sorrow be our daily chores?

if kith and kin are the main ingredients of life
why do we go on war with the same loved ones?

if love and compassion are the guides of life
how can they themselves change to hatred in a second?

if eternal truth is in god's words
how can those words lead us into killing each other?

if man's purpose is just to be and multiply,
why should he die to know the truth of life?

Unixsa06 said...

OMG! Amazing to see strong emotions in well framed words..It is very philosophical..

Curious Mind said...

உலகின் மனிதர் அனைத்தும் ஒன்றேன்றால்
எனது உனது என பிரிவெதற்கு ?

உயிரினம் அனைத்தையும் இயக்கும் சக்தி ஒன்றேன்றால்
மனித உருவில் மட்டும் கடவுளை நினைப்பதேனோ ?

ஐம்புலனையும் அடக்கி ஆள்பதே வெற்றியென்றால்
ஐம்புலனை முதற்கண் கொடுத்தின் விளக்கமென்ன ?

இறந்த மனிதன் கொண்டு செல்ல ஏதும் இல்லையென்றால்,
அனைத்தையும் அடைந்துவிட என்றும் அணையா துடிப்பு எதற்கு ?

வாழ்வின் பொருளை உணர்ந்தவர் அரிதென்றால்
நல்லது தீயது என்பதை விதித்ததாரோ ?
...
...

உலகில் உயிர் தோன்றியதே ஒரு விபத்தென்றால்
உண்மையில் வாழ்வின் பொருள் என்று தான் ஒன்று உள்ளதோ ?